காஞ்சிபுரம் : திருச்சி மாவட்டம், சிக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ், (22), டிரைவர். அரக்கோணத்தைச் சேர்ந்த மங்கலம் பகுதியில், லாரியில் மாடு ஏற்றி செல்வதற்காக வந்தார். நேற்று காலை 6:15 மணிக்கு காஞ்சிபுரம் அடுத்த கூரம் ,ரயில்வே கேட் அருகில் லாரியை நிறுத்தி இயற்கை உபாதை, கழிக்க சென்றார். பின் ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து மொபைல் போனில் பேசிகொண்டிருந்தார். அப்போது அரக்கோணத்தில் இருந்து சென்னை, கடற்கரை சென்ற மின்சார ரயில், வருவதை அவர் கவனிக்கவில்லை. ரயில் அருகில் வந்ததும் தப்பிக்க முயற்சி செய்த போது அவர் மீது ரயில், மோதி துாக்கி வீசப்பட்டார். இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்தில் இறந்தார். இது குறித்து காஞ்சிபுரம் ரயில்வே காவல் துறையினர், விசாரிக்கின்றனர்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்