தென்காசி: பாவூர்சத்திரத்தில் லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்த நபர் கைது செய்து சிறையில் அடைப்பு
தமிழகத்தில் லாட்டரி சீட்டுகளின் விற்பனை தடை செய்யப்பட்டுள்ள நிலையில், தென்காசி மாவட்டத்தில் லாட்டரி சீட்டுக்கள் விற்பனையை முற்றிலும் தடுக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் IPS அவர்களின் உத்தரவின் பேரில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பாவூர்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருவள்ளுவர் நகர் அருகே சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக காவல் துறைக்கு.
கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சார்பு ஆய்வாளர் திரு. கிருஷ்ணன் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த கீழப்பாவூரை சேர்ந்த பெரியசாமி என்பவரின் மகன் கேசவராஜா (50) என்ற நபர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தார். மேலும் அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூபாய் 21 ஆயிரம் மதிப்புள்ள லாட்டரிச் சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட கேசவராஜா மீது ஏற்கனவே லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததற்காக இரண்டு வழக்குகள் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.