மதுரை: மதுரைவைகை ஆற்றின் அருகே புகையிலை பொருட்கள் பறிமுதல் பெட்டிக் கடைக்காரர் கைது.
மதுரை மார்ச் 11 வைகை ஆற்றின் தெற்கு பகுதியில் ஏவி பாலத்தின் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக விளக்குத்தூண் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினார். சோதனையில் அங்குள்ள பெட்டி கடை ஒன்றில் தடைசெய்யப்பட்ட 30 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து சோமசுந்தர அக்ரஹாரத்தை சேர்ந்த முகமது உசேன்78 என்ற முதியவரை கைது செய்தார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி