அரியலூர் : அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் உதவி ஆய்வாளர் திரு. திருவேங்கடம், தலைமையிலான காவல் துறையினர், கடைவீதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கழுமங்கலம் கிராமத்தை சேர்ந்த ரகுபதி (34), நாயகனைப்பிரியால் கிராமத்தை சேர்ந்த தேவேந்திரன் (59), ஆகியோர் தங்களது பெட்டிக்கடைகளில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் காவல் துறையினர், கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
ஜெயங்கொண்டம் பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பல்வேறு புகார் வந்தது. இதையடுத்து, ஜெயங்கொண்டம் உதவி ஆய்வாளர் திரு. நாகராஜ், தலைமையிலான அப்பகுதியில் காவல் துறையினர், தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஜூபிலி ரோட்டுத்தெருவை சேர்ந்த ஜாபர்அலி (41), என்பவர் தனது கடையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை காவல் துறையினர், , கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த ரூ.6,360 மதிப்புள்ள 53 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.