பெரம்பலூர் : பெரம்பலூர் காவல் உதவி ஆய்வாளர் திரு .சண்முகம், தலைமையிலான காவல்துறையினர், ரோந்து சென்றனர். அப்போது அரணாரையில் ஒரு மளிகை கடையில் அரசால் தடை செய்யப்பட்ட மொத்தம் 10 கிலோ 200 கிராம் எடையுள்ள புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அந்த புகையிலை பொருட்களை காவல்துறையினர், பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக காவல்துறையினர், வழக்குப்பதிந்து கடையின் உரிமையாளரை குமாரை (52), கைது செய்தனர்