வேலூர்: வேலூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருஎஸ்ராஜேஷ் கண்ணன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் இன்று 22. 03 .2022 அணைக்கட்டு அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ மாணவியர்களுக்கும் எரி புதூர் நாராயணபுரம் ஆகிய இடங்களில் மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை செய்யும் பெண்கள் இடையே பெண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை பற்றியும் அது எவ்வாறு ஏற்படுகிறது மற்றும் அதை எதிர்கொள்வதை பற்றியும் அது தொடர்பான புகார்களை உடனடியாக தெரிவிப்பதற்கு பயன்படும்.
உதவி எண்கள் (181 – Women Help Line 1098 Child Help Line and Kavalan SOS) குறித்த விழிப்புணர்வையும் ஆய்வாளர் திருமதி லதா அவர்களின் தலைமையிலான பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான தடுப்பு பிரிவினர் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலம் இச் சிறப்புப் பிரிவினர் மாவட்டத்தில் இதுவரை சுமார் 185 ற்கும் மேற்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி வருகின்றன என்பதைத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.