கோவை : கோவை மே 7, கோவை மதுக்கரை கடை வீதியில், உள்ள தண்டபாணி தோட்டத்தில் வசிப்பவர் மைதிலி .இவரது மகன் சுரேந்தர்(15 ), இவர் மதுக்கரை அரசு பள்ளிக்கூடத்தில், பிளஸ் 1 படித்து வந்தார். இந்த சிறுவன் தனது மாமா வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று மதியம், அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்களான தானிஸ் வரன் ( 13), யஷ்வந்த் (13), ஆகியோருடன் மதுக்கரை குரும்பபாளையம், பகுதியில் உள்ள மஞ்சபள்ளம், தடுப்பணைக்கு குளிக்கச் சென்றார். அப்போது நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருக்கும்போது, சுரேந்திரன் திடிரென்று ஆழமான பகுதிக்குச் சென்று விட்டார். நீச்சல் தெரியாததால், தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தான்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த, சக நண்பர்கள் சத்தம் போட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில், உள்ளவர்கள் அங்கு ஓடிவந்து தண்ணீரில் மூழ்கிய சிறுவனை, மீட்டு வெளியே கொண்டு வந்தனர். ஆனால் சிறுவன் உயிரிழந்துவிட்டான். இதுகுறித்து தகவல் அறிந்ததும், மதுக்கரை காவல் துறையினர் , சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல் துறையினர்,விசாரித்து வருகிறார்கள்.