தஞ்சை: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டம் திருவிடைமருதூர் வட்டம் பகுதிகளில் போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சார்பில் காவலர்கள் தின விழா கொண்டாடப்பட்டது.
அதனை முன்னிட்டு காவல் துறை துணை கண்காணிப்பாளர்கள் கும்பகோணம் திரு. கணேசமூர்த்தி, திருவிடைமருதூர் திரு.வெங்கடேஷ் மற்றும் கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு.மகாதேவன், திருவிடைமருதூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு ராஜேந்திரன், நாச்சியார்கோயில் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.ஜெயகௌரி, குடந்தை கிழக்குகாவல் நிலைய உதவி ஆய்வாளர் சுதா ஆகியோர்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் மாநில சிறப்பு செய்தியாளர் குடந்தை .ப.சரவணன் மற்றும் பாபநாசம் செய்தியாளர் .ஞானசேகரன் ஆகியோர் நேரில் சென்று அதிகாரிகள் அனைவருக்கும் பொன்னாடை அணிவித்தும், காவலர்களுக்கு இனிப்புகள் வழங்கி போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழின் தலைமை ஆசிரியர் திரு.அ.சார்லஸ் அவர்கள் சார்பில் காவலர் தின நல் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.
நமது சிறப்பு நிருபர்
குடந்தை . ப.சரவணன்