மதுரை: உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில், 12 மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறும் நிலையில், மீனாட்சியம்மன் கோவிலுக்கு நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர். மேலும் ,பல்வேறு வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில், கோவிலை சுற்றி அவ்வப்போது பக்தர்கள் தங்கள் கவனக்குறைவின் காரணமாக நகை மற்றும் பணத்தை தவறவிடும்.
நிலையில், அதனை கண்டெடுக்கும் பொதுமக்கள் அருகில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறையில் பொருட்களை ஒப்படைத்து வருகின்றனர். இந்நிலையில், மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை வீதிகளில் பக்தர்கள் தவறவிட்ட 2 சவரன் தங்க நகைகள் மற்றும் 547கிராம் வெள்ளி பொருட்கள் வட்டாச்சியரிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்தப்பொருட்களை தற்போது வரை யாரும் உரிமம் கோராத காரணத்தினால், பொருட்கள் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக, காவல்துறை தரப்பில் தகவல் தெரிவித்துள்ளது.