கோவை: பெ.நா.பாளையம் துடியலுாரில், டாஸ்மாக் பாரில் மது அருந்தியவர்கள் பணம் தராமல் தகராறில் ஈடுபட்டு, பார் உதவியாளரைத் தாக்கியதில், அந்தநபர் உயிரிழந்தார். ராமநாதபுரம் மாவட்டம், சித்தார்கோட்டை, பாரதி நகரைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன், 21. இவர் துடியலுாரில் உள்ள டாஸ்மாக் பாரில் உதவியாளராக பணியாற்றி வந்தார். கடந்த மார்ச், 25ம் தேதி, மது அருந்த வந்த துடியலுார் பிரனேஷ், 22; இடையர்பாளையம் உதயகுமார், 23, ஆகியோர் மது அருந்திவிட்டு பணம் தராமல் ரகளை செய்துள்ளனர்.
இதைத் தட்டி கேட்ட விக்னேஸ்வரனை, இருவரும் அங்கிருந்த கல்லால் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த விக்னேஷ்வரன், கோவையில் உள்ள தனியார் மருத்து வமனையில் சேர்க்கப்பட்டார். உயர் சிகிச்சைக்காக, மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட விக்னேஷ்வரன், சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுதொடர்பான வழக்கை, கொலை வழக்காக மாற்றிய துடியலுார் போலீசார், விசாரிக்கின்றனர்.