தமிழகக் காவல்துறை தலைமை இயக்குநர் திரு.T.K.ராஜேந்திரன், IPS., அவர்கள் தமிழகம் முழுவதும் மண்டல வாரியாக காவலர் குறை தீர்ப்பு முகாம்களை நடத்தி காவலர்களின் குறைகளை கேட்டறிந்து, அவற்றின் மீது உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக 17.02.2018 அன்று காலை 10.00 மணி முதல் எழும்பூர் இராஜரத்தினம் திடலில் தமிழகக் காவல்துறை தலைமை இயக்குநர் அவர்களின் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது.
இக்குறைதீர்ப்பு முகாமில் காவல் துறை தலைமை இயக்குநர் திரு.T.K.ராஜேந்திரன் IPS., அவர்கள், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.A.K.விசுவநாதன் IPS., அவர்கள், கூடுதல் ஆணையர்கள் சேஷசாயி, ஜெயராம், அருண், கணேசமூர்த்தி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தமிழகக் காவல்துறை தலைமை இயக்குநர் திரு.T.K.ராஜேந்திரன், IPS அவர்கள் கூறியதாவது, பணிமாறுதல் அதிகம் பேருக்கு வழங்கி விட்டால் சென்னை காவல் ஆணையருக்கு கஷ்டம் ஆகி விடும். எப்படி பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது, ரோந்து பணிக்கு என்ன செய்வது? போன்ற பிரச்சினைகள் இருக்கிறது. எனவே மீதம் உள்ளவர்களை காத்திருப்போர் பட்டியலில் வைத்துஇ மீண்டும் வாய்ப்பு வரும்போது முன்னூரிமை அடிப்படையில் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்.
தற்போது 3 ஆயிரம் காவல்துறையினர் பயிற்சி பெற்று வருகிறார்கள். 3 மாதங்கள் கழித்து அவர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள். அப்போது தேவைக்கு ஏற்ப பணிமாறுதல் வழங்கப்படும்.
மேற்படி குறை தீர்ப்பு முகாமில் சென்னை பெருநகரக் காவல் துறையில் பணிபுரியும் காவல் ஆளிநர்கள், பல்வேறு சிறப்புப் பிரிவுகளில் பணிபுரியும் காவல் ஆளிநர்கள், தமிழ்நாடு சிறப்புக் காவல் படை காவல் ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் என மொத்தம் சுமார் 1541 பேர் கலந்து கொண்டு பணி மாறுதல், தண்டனை குறைப்பு, காவலர் குடியிருப்பு, ஊதிய முரண்பாடு, வாரிசு வேலை தொடர்பான மனுக்களை கொடுத்து பயன்பெற உள்ளனர்.