வேலூர் : திருவண்ணாமலை மாவட்ட தனிப்படை உதவி ஆய்வாளர் திரு.M.சத்யாநந்தன், அவர்களின் தலைமையிலான காவல்துறையினர் அரசால் தடை செய்யப்பட்ட 20.5 கி.கி கஞ்சா, 1030 கி.கி குட்கா பொருட்கள் பறிமுதல், சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 19 டன் ரேஷன் அரிசி பறிமுதல், 12 லாட்டரி வழக்குகள், மற்றும் 10 வழிப்பறி வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக, மெச்சத் தகுந்த பணியை பாராட்டி. (29.05.2022)-ந் தேதி வேலூர் சரக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், தமிழக தலைமை காவல் துறை இயக்குனர் திரு.C.சைலேந்திரபாபு,இ.கா.ப., அவர்கள் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வில் வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் டாக்டர்.Z. ஆனி விஜயா,இ.கா.ப., அவர்கள் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன்குமார்,இ.கா.ப., அவர்கள் உடன் இருந்தனர்.