திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை அருகே வெள்ளோடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த முத்துமணி(29) என்பவரை டி.எஸ்.பி முருகன் மேற்பார்வையில், அம்பாத்துரை இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா