பெரம்பலூர்: சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெரம்பலூர் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை
திருச்சி மண்டல காவல் துறை தலைவர் திரு.V.பாலகிருஷ்ணன் இ.கா.ப, அவர்களின் உத்திரவின்படியும், திருச்சி சரக காவல் துறை துணைத்தலைவர் திரு.A.சரவண சுந்தர் இ.கா.ப, அவர்களின் அறிவுறித்தலின்படியும், பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.மணி அவர்கள் வழிகாட்டுதல்படியும், சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.சுப்பிரமணி அவர்களின் மேற்பார்வையில், இன்று 11/03/2022 ஆம் தேதி பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் (BDO office) சைபர் கிரைம் காவல் உதவி ஆய்வாளர் திரு.S.மனோஜ் அவர்கள் மற்றும் முதல் நிலை காவலர் சதீஷ்குமார், காவலர் முத்துசாமி ஆகியோர் சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு செய்தனர்.
இணையம் வழியாக நடக்கும் குற்றங்களான ஏடிஎம் கார்டை பயன்படுத்துவது பற்றியும், ஏடிஎம் கார்டு மற்றும் ஒடிபி எண் பகிரகூடாது என்பது பற்றியும், வங்கி விவரங்களை யாருக்கும் கூறக்கூடாது என்றும், வேலை வாங்கி தருவது, E-Bike dealership, கடன் வழங்கும் செயலிகள், ஆபாச வீடியோக்கள் மூலம் மிரட்டி பணம் பறித்தல், எண்மநாணயம் (Cryptocurrency) மோசடி, அயல்நாடு வேலைக்கு செல்வது, செல்போன் டவர் வைப்பது, பரிசு கிடைத்திருப்பது, சமூக வலைதளங்கள், தங்களை பற்றிய தகவல்களை பாதுகாப்பாக வைப்பது குறித்து, பாஸ்வேர்டு அடிக்கடி மாற்ற வேண்டுவது குறித்தும், ஆன்லைன் விளையாட்டு குறித்தும், தேவையில்லாத அப்ளிகேசன் குறித்தும், வங்கிகளில் பணம் செலுத்தும் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்தும், மேலும் மூலம் பண இழப்பு ஏதேனும் ஏற்பட்டால் சைபர் கிரைம் உதவி எண் 1930 க்கு உடனடியாக தகவல் அளிப்பது குறித்தும், www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் எவ்வாறு புகார் செய்வது என்பது குறித்து வங்கி ஊழியர்களுடன் இணைந்து வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்கள் மற்றும் கிராம பொது மக்களிடையே விழிப்புணர்வு செய்யப்பட்டது. என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக பெரம்பலூர் மாவட்ட காவல்துறை.