தஞ்சாவூர் : சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.P.கென்னடி, அவர்கள் மேற்பார்வையில் இன்று (03.03.2022) தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் உட் கோட்டம் கும்பகோணம் பேருந்து நிலையம், சுவாமிமலை பஜார் ஆகிய இடங்களில் பொதுமக்களுக்கு தற்போது அதிகரித்து வரும் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கியும், இலவச தொலைபேசி அழைப்பு எண் 1930 பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் சைபர் குற்றங்கள் குறித்து www.cybercrime.gov.in என்ற NCRP இணையதளத்தில் எவ்வாறு புகார் கொடுப்பது பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.