வேலூர் : காவல்துறை தலைமை இயக்குநர் அவர்களின் உத்தரவின்படி, வேலூர் மாவட்ட கண்காணிப்பாளர் S. திரு. ராஜேஷ் கண்ணன் இ.கா.ப., அவர்கள் தலைமையில், இன்று (07.06.2022), வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், அனைத்து சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்களிலும் நியமிக்கப்பட்டுள்ள Cyber Cell- Cyber Crime supporting Officer (SSI – 1, Gr.I – 1, PC – 1) என 69 காவல் அதிகாரிகளுக்கு சைபர் கிரைம் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் புகாரை எவ்வாறு பதிவு செய்வது என்பது தொடர்பான சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில் ‘சைபர் கிரைம் (இணையவழி குற்றங்கள்), குறி்த்து பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
தற்சமயம் ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் தனியாக cyber cell தொடங்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அளிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்பான, புகார் மீது உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில், செயல்படவேண்டும். என அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. C.R. பூபதி ராஜன், DCB (I/C) CCW மற்றும் காவல் ஆய்வாளர் திருமதி. அபர்ணா, CCW மற்றும் காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் கலந்து கொண்டார்கள். cyber support officers ஆக நியமிக்கப்பட்டுள்ள காவல் அதிகாரிகள், (www.cybercrime.gov.in) என்ற வலைத்தளத்தில், உடனுக்குடன் புகார் பதிவு செய்யவும், பணம் இழப்பு தொடர்பான புகார்களை 1930 என்ற சைபர்கிரைம் Helpline number க்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்க பொது மக்களுக்கு உதவி துரித நடவடிக்கை மேற்கொள்வதற்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.