வேலூர் : திருவண்ணாமலை மாவட்ட சைபர் கிரைம், காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி.K.பாரதி, அவர்களின் தலைமையிலான காவல்துறையினர், செல்போன் காணாமல் போனதாக காவல் நிலையங்கள், மூலம் பெறப்பட்ட புகார்களை விசாரணை செய்து 150 செல்போன்களை பறிமுதல் செய்தனர். மேலும் ஆன்லைன் வழியாக மோசடி கும்பலால் திருடப்பட்ட பணம் ரூபாய் 10,08,160/- கைப்பற்றி உரியர்களிடம் ஒப்படைத்து சிறப்பாக பணிபுரிந்தமைக்காக மெச்சத் தகுந்த பணியை பாராட்டி, (29.05.2022)-ந் தேதி வேலூர் சரக அலுவலகத்தில் நடைபெற்ற, நிகழ்வில் தமிழக தலைமை காவல் துறை இயக்குனர் திரு.C.சைலேந்திரபாபு,இ.கா.ப., அவர்கள் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வில் வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் டாக்டர்.Z. ஆனி விஜயா,இ.கா.ப., அவர்கள் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன்குமார்,இ.கா.ப., அவர்கள் உடன் இருந்தனர்.