சென்னை: இரவு நேரத்தில் ரோந்து பணியில் இருந்த காவலர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சென்னை வடக்கு மண்டல காவல் இணை ஆணையாளர் திருமதி.ரம்யா பாரதி, இ.கா.ப.¸ அவர்கள் 25.03.2022 -ம் தேதி அதிகாலையில் திடீரென தனியாக சைக்கிளில் சென்று வடக்கு மண்டல பகுதிகளையும் காவல் நிலையங்களையும் ஆய்வு செய்தார். சைக்கிளில் இரவு ரோந்து சென்று வட சென்னையில் ரௌடிகளை அடக்கி ஒடுக்குவதில் தீவிரம் காட்டும் காவல் இணை ஆணையாளரை¸ காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் முனைவர் செ.சைலேந்திர பாபு¸ இ.கா.ப.¸ அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்