சென்னை : சென்னை பெருநகரில் “போதை பொருள் தடுப்புக்கான நடவடிக்கை” மூலம் கஞ்சா மற்றும் போதை, பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள், தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, யானைகவுனி காவல் நிலைய ஆய்வாளர், தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் நேற்று (22.04.2022) வால்டாக்ஸ் ரோடு, NSC போஸ் சாலை சந்திப்பில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே வந்த காரை நிறுத்தி விசாரணை செய்து, சந்தேகத்தின் பேரில், காரை சோதனை செய்தபோது, காரில் கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
அதன் பேரில் சட்டவிரோதமாக காரில் கஞ்சா கடத்தி வந்த 1) முகமது நௌசத் அலி (35), முத்தியால்பேட்டை அவரது மனைவி ஆயிஷா (23), ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் 30 கிலோ எடை கொண்ட கஞ்சா மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய கார், ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் மேற்படி கணவன் மனைவி, இருவரும் சேர்ந்து ஆந்திராவிலிருந்து, கஞ்சாவை சென்னைக்கு, கடத்தி வந்தது தெரியவந்தது. மேற்படி எதிரிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.