சென்னை: வடமாநில பெண்ணை கொலை செய்த குற்றவாளி கைது செய்த தனிப்படை காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிங்கி, பெ/வ.30 என்பவர் சென்னை, அண்ணாநகர் மேற்கு, 18வது தெரு, H-பிளாக் என்ற முகவரியில் முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு, கிருஷ்ணபகதூர், வ/26, என்பவருடன் கடந்த 6 மாதமாக வசித்து வந்துள்ளார்.
கிருஷ்ணபகதூர் கடந்த 04.08.2019 அன்று இரவு சுமார் 08.00 மணியளவில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, பிங்கி தரையில் விழுந்தபடி இறந்து கிடந்துள்ளார். இது குறித்து காவல் கட்டுபாட்டு அறைக்கு தெரிவிக்க, V-5 திருமங்கலம் போலீஸார் சம்பவயிடம் சென்று பார்த்தபோது, பிங்கியின் தலை மற்றும் உடலில் இரத்தக்காயங்கள் இருந்ததால் வழக்குப் பதிவு செய்து தனிப்படையினர் அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.
தனிப்படையினர் சம்பவ தினத்தன்று பிங்கியை செல்போனில் தொடர்பு கொண்ட எண்களை வைத்து அரியானாவைச் சேர்ந்த விகாஷ் என்பவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் பிங்கியின் வீட்டிற்கு பலமுறை வந்துள்ளதும், சம்பவ தினத்தன்று (04.8.2019) மாலை விகாஷ் பிங்கியின் வீட்டிற்கு வந்தபோது, பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டு விகாஷ் பிங்கியை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றதை ஓப்புக்கொண்டதன் பேரில் குற்றவாளியான S.விகாஷ், (23), என்பவரை கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.
மேற்படி வெளிமாநிலத்திற்கு தப்பிச் செல்ல இருந்த கொலை குற்றவாளியை கைது செய்த திருமங்கலம் காவல் நிலைய உதவி ஆணையாளர் திரு.A.சிவகுமார் தலைமையில், திருமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.M.ரவி, உதவி ஆய்வாளர்கள் திரு.K.பாண்டியராஜன், திரு.S.யுவராஜ், தலைமைக்காவலர்கள் G.ரவி (த.கா.31132), T.ஜோசப் (த.கா.20948), E.கண்ணன் (த.கா.26668), முதல்நிலைக் காவலர் A.ஜெயகுமார் (மு.நி.கா.31072), ஊர்க்காவல் படை காவலர்கள் அருள் மற்றும் தனஞ்செழியன் ஆகியோர் அடங்கிய தனிப்படை காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் (07.08.2019) நேற்று நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.