சென்னை : சென்னை, மே 7-சென்னை உயர்நீதிமன்றத்தில், ‘மெஜஸ்டிரியல் கிளர்க்’ வேலைக்கு, போலி பணி நியமன ஆணை, வாயிலாக, ஆட்களுக்கு, தலா ஆறு லட்சம் ரூபாய், வரை பெற்று மோசடி செய்ததாக, சி.பி.சி.ஐ.டி., காவல் துறையினருக்கு புகார் வந்தது. விசாரணையில், உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின், முத்திரை மற்றும் கையொப்பத்தை வைத்து, போலி பணி நியமன ஆணை, தயாரிக்கப்பட்டது தெரிந்தது.
இந்த வழக்கில், வழக்கறிஞர், நாகேந்திரா குமார், மணி, குமார், உட்பட நான்கு பேரை, சி.பி.சி.ஐ.டி.,காவல் துறையினர், நேற்று கைது செய்தனர். மேலும் அவர்களிடம் , இருந்து, விண்ணப்பதாரர்களின் பள்ளி மற்றும் கல்லுாரி, மதிப்பெண் பட்டியல் மற்றும் மாற்றுச் சான்றிதழ்களை, பறிமுதல் செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.