சென்னை : சென்னை அம்பத்தூர் சிவானந்தம், நகரை சேர்ந்த லோகேஷ் என்ற கார்த்திக்கும், அவரது தம்பி வெங்கடேஷ், இவர்கள் இருவரும் அம்பத்தூர் வானகரம் நெடுஞ்சாலையில் கலைவாணர் நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். அவர்கள் பணியாற்றும் நிறுவனத்திற்கு வந்த ஒரு கும்பல், இருவரிடமும் தகராறில் ஈடுபட்டுள்ளது. இதன் பின்னர் கார்த்திக்கும், வெங்கடேசும், நிறுவனத்தில் இருந்து வெளியே வந்த போது அதே கும்பல் இருவரையும் தாக்கியுள்ளது. அப்போது, வெங்கடேஷ் தப்பியோடிவிடவே கார்த்திக்கை, அந்த கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டியது. இதில், ரத்த வெள்ளத்தில் கிழே விழுந்த கார்த்திக், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த காவலர், கார்த்திக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் (17) வயது சிறுவன்உட்பட, 10 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
















