சென்னை : சென்னை மீனம்பாக்கம், அடுத்த பழவந்தாங்கல் பக்தவச்சலம், நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 2வது தளத்தில் ரிங்கி, என்பவரோடு கெஸ்டாக தங்கியுள்ளார், மும்பையைச் சேர்ந்த பூஜா நடுவர் (27), இவர் தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அதே கட்டடத்தில் தரைதளத்தில் ரிங்குவின் சகோதரர் பவன் (25), என்பவர் வசித்து வருகிறார். இவரும் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். வேலை செய்து கொண்டே தமிழக பாஜக மாநில பொதுச்செயலாளர் கருநாகராஜன், என்பவருக்கு இந்தி மொழிபெயர்ப்பு, மற்றும் அலுவலக உதவியாளராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று தனது சகோதரியுடன் தங்கியுள்ள பூஜா, நடுவரை தனது அறைக்கு வருமாறு அழைத்தார் பவன். அப்போது தனது அறையை சுத்தம் செய்யச் சொல்லி பூஜாவிடம் பவன் கூறியதாக தெரிகிறது. அதற்கு பூஜா மறுப்பு தெரிவிக்கவே இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் பூஜாவின் மேலாடைகளை கிழித்த பவன், அவரை சரமாரியாக தாக்கியதுடன் தோள்பட்டை, மார்பு போன்ற பகுதிகளில் கைகளால் சரமரியாக தாக்கியுள்ளார். அதே நேரத்தில் அந்தப் பெண்ணுடன் தவறாக நடக்கவும் முயற்சித்ததாக தெரிகிறது.
இதனையடுத்து அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பவனிடமிருந்து அந்த பெண்ணை மீட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பூஜா, பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல் நிலைய ஆய்வாளர் திரு. சபரினாத், வழக்கு பதிவு செய்து விசாரித்தார். பின்னர் பவன் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் கருநாகராஜன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டது என்றும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில்தான் பாஜகவை சேர்ந்த கருநாகராஜன் அலுவலக உதவியாளர் பெண் ஒருவருடன் தவறாக நடக்க முயற்சித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.