கோவை : சூலுார், வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 50 கிலோ கஞ்சாவை காவல் துறையினர், பறிமுதல் செய்தனர். கஞ்சா வியாபாரியான பெண்ணை கைது செய்து. சிறையில் அடைத்தனர். கோவை மாவட்டம், சோமனூர் நொய்யல் ஆற்றங்கரையில், 25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு சில வாரங்களுக்கு முன் இருவர் கைது செய்யப்பட்டனர். அதில் தப்பிய நபரை காவல் துறையினர், தேடி வருகின்றனர். இந்நிலையில், சூலூர் காவல் ஆய்வாளர் திரு. மாதையன், எஸ்.ஐ., திரு .ராஜேந்திர பிரசாத், மற்றும் காங்கயம், காவல் துறையினர், பாளையம் பகுதியில் நேற்று காலை ரோந்து சென்றனர். அப்போது, சந்தேகத்துக்கு , இடமான வகையில் மூட்டைகளுடன், சென்ற பெண்ணை நிறுத்தி விசாரித்தனர்.
மூட்டையில் கஞ்சா, இருப்பதை கண்டுபிடித்தனர். அப்பெண்ணை கைது செய்து, வீட்டில் பதுக்கி வைத்திருந்த, 50 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அப்பெண், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த பாண்டியம்மாள்,(30), என்பது தெரிந்தது. கஞ்சாவை மொத்தமாக, கொண்டு வந்து சூலூர், கருமத்தம்பட்டி பகுதியில், விற்று வந்தது தெரிந்தது. கணவரும் கஞ்சா வியாபாரி, என்பதும், கீரிப்பட்டியை சேர்ந்த ராஜேஷ் கண்ணனுடன், சேர்ந்து கஞ்சா வியாபாரம் செய்ததும் தெரிந்தது. அப்பெண்ணை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் .குண்டர் சட்டம் பாயும், 50 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த சூலூர் காவல் துறையினரை, எஸ்.பி., திரு.பத்ரி நாராயணன், பாராட்டினார்.
அவர் நிருபர்களிடம் கூறியதாவது, மாவட்டம் முழுக்க, 130 கஞ்சா வழக்குகளில், 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நான்கு பேர் மீது குண்டர் சட்டத்தின், கீழ் நடவடிக்கை எடுக்க உள்ளோம். கஞ்சா விற்பவர்கள் மீது, குண்டர் சட்டம் பாயும். கஞ்சா வியாபாரிகள் ஜாமினில் வெளி வருவதை, தடுக்க, உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம். மக்களும் தங்கள் பகுதியில் கஞ்சா வியாபாரம், நடப்பது தெரிந்தால், காவல் துறையினருக்கு, தகவல் அளிக்க வேண்டும். இவ்வாறு, என்று கூறினார்.