கோவை : கிணத்துக்கடவு அருகே உள்ள கொண்டம்பட்டி, செல்லம் காட்டு தோட்டம், செல்லும் வழியில் இட்டேரி பகுதியில் சேவல் சூதாட்டம், நடைபெறுவதாக காவல் துறையினருக்கு, ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கிணத்துக்கடவு காவல் நிலைய, சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. சுந்தரமூர்த்தி, தலைமையில் காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு கிணத்துக்கடவு, அருகே உள்ள கப்பளாங்கரை பகுதியை சேர்ந்த கரிகாலன் (49), கஜேந்திரன்(30), மணிவாசகம்(33) ஆகிய 3 பேர் சேவல் சூதாட்டம் நடத்தியது, தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை காவல் துறையினர், கைது செய்தனர். மேலும் சூதாட்டத்துக்கு, பயன்படுத்திய 2 சேவல்கள், ரூ.400 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து காவல் துறையினர், கூறுகையில், சேவல் சூதாட்டம் நடத்துவது சட்டப்படி குற்றம் ஆகும். ஆனாலும் சிலர் அத்துமீறி செயல்படுகின்றனர். இனிமேல் சேவல் சூதாட்டம் நடத்துவது கண்டறியப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.