கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டை, தாலுகா ஜவளகிரி பகுதியில், உள்ள அரசு நிலத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாககாவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தளி காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. பழனிசாமி, தலைமையிலானகாவல் துறையினர், ஜவளகிரி பகுதிக்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 8 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர். பறிமுதல் அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஜவளகிரியை சேர்ந்த சீனிவாஸ் (38), மற்றொரு சீனிவாஸ் (42), ராஜேஷ் (28), சீனிவாசன் (56), நாராயணப்பா (54), கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டம், கனகபுரா அருகே உள்ள கொலகொண்டஅள்ளி பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (33), எச்.டி.பி.எல்.அள்ளி பகுதியை சேர்ந்த மாரப்பா (42), கொடிஅள்ளி பகுதியை சேர்ந்த மாரியப்பா (65), என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 8 பேரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் இருந்து 2 கார், 8 இருசக்கர வாகனங்கள், மற்றும் ரூ.1 லட்சத்து 67 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்