விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், பிரதான தொழிலாக பட்டாசு தயாரிக்கும் தொழில் இருந்து வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், சிவகாசி, சாத்தூர், திருவில்லிபுத்தூர், வெம்பக்கோட்டை தாலுகா பகுதிகளில் அதிகமாக, சுமார் 1500 பட்டாசு ஆலைகள், இயங்கி வருகின்றன. இவற்றில் நேரடியாக சுமார் 2 லட்சம் பேரும், பட்டாசு தொழிலில் மறைமுகமாக சுமார் 3 லட்சம் பேரும் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர். இந்தநிலையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி, போடப்பட்ட வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. உச்ச நீதிமன்றம் பட்டாசுத் தொழிலுக்கு , பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டது. குறிப்பாக பட்டாசுதயாரிக்கும் மூலப்பொருளில் (பேரியம் நைட்ரைட் ), உபயோகிக்கக்கூடாது மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பசுமை பட்டாசுகளை மட்டுமே தயாரிக்கவும், விற்பனை செய்யவும் வேண்டும். என்று கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளது.
பேரியம் நைட்ரைட் , உபயோகித்து பட்டாசுகள் தயாரிக்கும் ஆலைகள், மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிவகாசி சுற்றுவட்டார பகுதிகளில், செயல்பட்டு வரும் பட்டாசு ஆலைகளில் சி.பி. ஐ அதிகாரிகள் திடீர் சோதனைகள் நடத்தி பட்டாசு மூலப்பொருட்கள், மற்றும் தயாரான பட்டாசுகள் மாதிரிகளை எடுத்துச் சென்றனர். தற்போது உச்ச நீதிமன்றத்தில், பட்டாசுத்தொழிலுக்கான வழக்கு நடந்துவரும் நிலையில் கடந்த 2 நாட்களாக, மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை, அதிகாரிகள் மற்றும் சி.பி.ஐ அதிகாரிகள், பட்டாசு ஆலைகளில் மீண்டும் திடீர் சோதனைகளில், ஈடுபட்டு, பட்டாசு மூலப்பொருட்கள் மற்றும் தயாரான பட்டாசுகளின் மாதிரிகளை, எடுத்து சேகரித்து வருகின்றனர். மேலும், மாவட்ட நிர்வாக அனுமதி, பெற்று இயங்கும் சிறியரக பட்டாசு ஆலைகளில், மாவட்ட நிர்வாக அதிகாரிகளும் சோதனைகள் செய்து வருகின்றனர்.
இதனால் பட்டாசு ஆலைகளில் வேலைபார்த்து, வரும் தொழிலாளர்கள் மத்தியில் ஒருவித பதற்றம் ,ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளின் சோதனைகளை தவிர்ப்பதற்காக சிவகாசியை சுற்றியுள்ள, பகுதிகளில் செயல்பட்டுவரும் பெரும்பாலான பட்டாசு ஆலைகள் தொழிலாளர்களுக்கு, விடுமுறை அளித்து ஆலைகளை பூட்டியுள்ளனர். ,இதனால் பட்டாசு ஆலைகளில் வேலைபார்த்து வந்த தொழிலாளர்கள் ,வேலைவாய்ப்பை இழந்து கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். தொடர்ந்து 3வது நாளாக இன்றும் பட்டாசு ஆலைகளில், மத்திய அரசு அதிகாரிகளின், சோதனை நடந்து வருகிறது. மாவட்ட நிர்வாக, அனுமதிபெற்றுள்ள பட்டாசு ஆலைகளில், விதிமீறல் இருந்ததாக நூற்றுக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளுக்கு, விளக்கம் கேட்டு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை, எடுத்துள்ளது. தொடர்ந்து பட்டாசு ஆலைகளுக்கு நெருக்கடி , இருந்து வருவதால் இந்த ஆண்டுக்கான தீபாவளி பண்டிகைக்கு தேவையான பட்டாசுகள் தயாரிப்பதில், கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. பட்டாசு தொழிலை நம்பியுள்ள பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும், மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி