சிவகங்கை: சிவகங்கை நகர் காவல் நிலைய குற்ற எண். 392,397,506(ii) IPC Act என்ற குற்ற வழக்கின் எதிரியான ஐயப்பன்,நூறு முகமத், சூர்யா ஜெகதீஸ், பாலச்சந்திரன் ஆகியோர் சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரோகித் நாதன் IPS, அவர்கள் பரிந்துரையின் பேரில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் J.ஜெயகாந்தன் IAS அவர்கள் மேற்படி எதிரியை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். இதன்படி சிவகங்கை நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. மோகன் அவர்கள் 12.09.2019-ம் தேதி மேற்படி எதிரிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தார்.