சிவகங்கை: மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்த இளம்முருது (40) என்பவர் காரைக்குடி மானகிரியில் உள்ள கார் கம்பெனியில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார், கடந்த 01.06.2018 ஆம் தேதி பழைய கார்களை வாங்கி விற்பனை செய்த வகையில் தனது நண்பர்களுடன் சேர்ந்து கம்பெனிக்கு கட்ட வேண்டிய ரூபாய் 78,97,773 பணத்தை கள்ள மனதுடன் அபகரிக்கும் விதமாக நம்பிக்கைமோசடி செய்துள்ளார். இதுதொடர்பாக கம்பெனியின் நிர்வாக இயக்குனர் ராதா அவர்கள் 22.08.2019 அன்று அளித்த புகாரின் பேரில் மாவட்டகாவல் கண்காணிப்பாளர் திரு.ரோகித் நாதன் ராஜகோபால் IPS அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இளம்முருது மீது U/S 403, 406,420,120(b) IPC-ன் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர் .