சிறைதுறை துணை தலைவர் திரு.முருகேசன் வீட்டில் ரெய்ட் என்ற செய்திக்கு அவரின் தன்னிலை விளக்கம்
செய்தியை யார் முந்தி வெளியிடுவது என்ற போட்டியில் வேண்டாத நபர்கள் கொடுக்கும் பொய்யான செய்தியை உண்மையென நம்பி விவரமறியாமல் வெளியிடுவது கொலை செய்வதற்கு சமம்.
என்னுடைய வீட்டில் யார் ரெய்டு செய்தது?
ஏதேனும் ஆதாரம் உண்டா?
நான் சோதனை செய்து செல்போனை பறிமுதல் செய்தேன். ஆனால் நீங்கள் எனது வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு வருமானவரி ரெய்டு என பொய்யான செய்தியை மனசாட்சியின்றி வெளியிட்டு உள்ளீர்கள்.
புழலில் எனக்கு எதிரானவர்கள் பலர் உண்டு. அவர்கள் கொடுக்கும் பொய் செய்தியை அப்படியே வெளியிடுவது செய்தித்துறை மாண்பிற்கு ஏற்புடையதா? யோசியுங்கள்.
என்னுடைய பணிகள் எப்படிப்பட்டன என உங்களுக்கு என்ன தெரியுமா?
சிறைத்துறையில் ஏராளமான நற்பணிகளைச் செய்தவன் நான். இந்தியா சுதந்திரம் அடைந்த பின் யாரும் செய்யாத ஒரு பணியை செய்திருக்கிறேன். 50-60 தண்டனை சிறைவாசிகளை சுமார் 110 கிமீ தூரம் வரை வெளியில் எடுத்துச் சென்று அரசு மருத்துவமனை, பள்ளிகள் உள்ளிட்ட 30 பொது இடங்களை சுத்தம் செய்து இருக்கிறேன். இப்பணி போன்று இந்தியாவில் வேறு எங்கேனும் செய்து உள்ளார்களா? ஏராளமான விவசாய பொருட்களை உற்பத்தி செய்து இருக்கிறேன்.
ஆனால் 10 நிமிடத்தில் என்னை கொலை செய்து புதைத்து விட்டீர்கள்.
எனக்கு நடந்த இதே சம்பவம் உங்களுக்கோ குடும்பத்தில் எவருக்கோ நடந்தால் உங்கள் மனம் எப்படி தத்தளிக்கும் என்பதை உணர்ந்து மனசாட்சியுடன் செயல்படுங்கள்.
அரசுப் பணியில் இருப்பதால் அடிமை என நினைத்து செய்தி வெளியடுகிறீர்கள். நானும் அடிப்படையில் மனிதன் தான்.
ஆ. முருகேசன், M.A., M.L., MBA.,
சிறைத்துறை துணைத் தலைவர்,
சென்னை சரகம், எழும்பூர்,
சென்னை 600008.
9443202138