திருவண்ணாமலை : கடந்த 2011-ம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டம், வெளுங்கானந்தல் கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் தனது இளைய மகன் வினோத்குமார் வயது (12), என்பவரை காணவில்லை என கலசப்பாக்கம் காவல் நிலையத்தில், அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், அதே பகுதியைச் சேர்ந்த சாந்தி என்பவர் சிறுவனை கடத்தி கொலை செய்தது விசாரணையில், தெரியவந்தையடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணை திருவண்ணாமலை முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில், நடந்துவந்த நிலையில் நேற்று (12.07.2022)-ந் தேதி திருவண்ணாமலை முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி திருமதி.ஜமுனா அவர்கள், குற்றவாளிக்கு சிறுவனை கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், சிறுவனை கடத்திய குற்றத்திற்காக ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து குற்றவாளி சாந்தி வேலூர் பெண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
xதிருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்