அரியலூர் : அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கச்சிபெருமாள் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம் மகன் மணிகண்டன் (28), இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று காலையில், தா.பழூர் அருகே உள்ள ஒரு கிராமத்திற்கு சென்ற மணிகண்டன் அங்கு (14), வயது சிறுமியை கடத்திச்செல்ல முயன்றுள்ளார். சிறுமி சத்தம் போடவே அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து சிறுமியை, காப்பாற்றினர். பின்னர் இதுகுறித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் திருமதி. சுமதி, வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.