அரியலூர் : அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே இடங்கன்னி கிராமத்தில், உள்ள கீழத்தெருவை சேர்ந்த துரைவேம்புவின் மகன் செல்வகுமார் (21), இவர், (17), வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி வெளியூருக்கு அழைத்து சென்றார். இதுகுறித்து சிறுமியின் உறவினர்கள் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், புகார் அளித்தனர். அதன்பேரில் காவல் ஆய்வாளர திருமதி. சுமதி, விசாரணை நடத்தினார். இதில், அவர்கள் திருப்பூரில் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், போலீசார் அங்கு சென்று அவர்களை பிடித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு, அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது, செல்வகுமார் அந்த சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி வெளியூருக்கு கடத்திச் சென்று, அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரியவந்தது. இது குறித்துகாவல் துறையினர், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, செல்வகுமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
















