திருப்பூர் : திருப்பூரில் மூன்று சிறுமியரிடம் பாலியல் ரீதியாக, அத்துமீறிய தொழிலாளிக்கு, கோர்ட் 60 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. திருப்பூர் பலவஞ்சிபாளையத்தைச் சேர்ந்தகதிரேசன், (46), கூலித்தொழிலாளி. இவர் கடந்த ஆண்டு, மார்ச் மாதம் அதே பகுதியைச் சேர்ந்த, மூன்று சிறுமியரிடம் பாலியல் அத்துமீறலில், ஈடுபட்டுள்ளார். இதுகுறித்த புகாரின்படி, திருப்பூர் தெற்கு மகளிர் காவல் துறையினர், அவர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். இவ்வழக்கு, திருப்பூர் மகிளா கோர்ட்டில், விசாரணைக்கு வந்தது. இதில், குற்றவாளி கதிரேசனுக்கு, போக்சோ சட்டத்தில், 60 ஆண்டு சிறை தண்டனை, மற்றும் 12 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி நாகராஜ் தீர்ப்பளித்தார்.