மதுரை : விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம், வடக்கு மலையடிப்பட்டி எம்.ஜி.ஆர்., நகரில் உள்ள சர்ச் பாதிரியார் ஜோசப் ராஜா, (49), இந்த சர்சுக்கு, அதே பகுதியைச் சேர்ந்த பெண், தொடர்ச்சியாக வந்து சென்றுள்ளார். அவருடன் மன வளர்ச்சி குன்றிய, (14) , வயது மகளும் அவருடன் அங்கு வருவது உண்டு. அப்போது, அந்த சிறுமிக்கு, ஜோசப் ராஜா பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். சிறுமியின் உடலில் காயங்களை, கண்ட அவரது தாய் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து, ராஜபாளையம் மகளிர், காவல் நிலையத்தில், புகார் அளித்தார். காவல் ஆய்வாளர் திருமதி .மகேஸ்வரி, வழக்கு பதிந்து, பாதிரியார் ஜோசப் ராஜாவை, ‘போக்சோ’ எனப்படும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு, கடும் தண்டனை அளிக்க செய்யும், சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி