விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்த சிறுமியை, அதே பகுதியில் வசித்து வந்த விஜய் என்ற விஜயகுமார்(25), ஆனந்த்(22) மற்றும் காளிராஜ்(23) ஆகிய மூன்று நபர்கள் பாலியல் வன் கொடுமை செய்ததாக சிறுமியின் தாயார் 09.10.2015 அன்று கொடுத்த புகாரை தொடர்ந்து காவல் நிலைய ஆய்வாளர் திருமதி விஜயா அவர்கள் வழக்குப்பதிவு செய்தார்.
விஜய் என்ற விஜயகுமார், ஆனந்த் மற்றும் காளிராஜ் ஆகிய மூன்று நபர்களையும் கைது செய்தார். பின்னர் இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், 06.08.2019 அன்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதி திருமதி. காயத்ரி MA., ML., அவர்கள், முதல் மற்றும் இரண்டாவது குற்றவாளிகளான விஜய் என்ற விஜயகுமார் மற்றும் ஆனந்த் ஆகிய இருவருக்கும் தலா 20 வருடங்கள் கடுங்காவல் தண்டனையும் ரூ:9000/- அபராதமும் கட்டத்தவறினால் 3 வருடம் 6 மாதங்கள் கடுங்காவல் சிறை தண்டனையும், மூன்றாவது குற்றவாளியான காளிராஜ் என்பவருக்கு 15 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ:7000/- அபராதமும் கட்டத் தவறினால் 2 வருடம் 6 மாதங்கள் கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.
இதைத்தொடர்ந்து காவல்துறையினர் குற்றவாளிகளை மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை ஆரம்ப காலத்தில் பின்பற்றிய காவல்நிலைய ஆய்வாளர் திருமதி R.விஜயா, இவரைத் தொடர்ந்து இரண்டாவதாக வழக்கை பின்பற்றிய ஆய்வாளர் திருமதி. தேவமாதா, இவரைத் தொடர்ந்து இறுதிவரை வழக்கை பின்பற்றிய ஆய்வாளர் திருமதி. R.சாந்தகுமாரி மற்றும் நீதிமன்ற பெண் முதல் நிலை காவலர் GR1 243 திருமதி. R.விஜயகுமாரி ஆகியோருக்கு விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. M. ராஜராஜன் அவர்கள் பாராட்டுகளை தெரிவித்தார்.