திருச்சி : 31.03.22-ந்தேதி இன்று ஐ.சி.எம்.ஆர்./டி.ஹெச்.ஆர் அனுமதியுடன் ‘தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களின் போக்குவரத்து காவலர்களின் சுவாச ஆரோக்கியத்தில் காற்று மாசுபடுத்திகளின் விளைவு ஒரு கண்காணிப்பு ஆய்வு” என்ற தலைப்பில் பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி எஸ்.ஆர்.எம் மருத்துவக்கல்லூரியின் சுற்றுச்சூழல் உயிரி தொழில்நுட்பத்துறையுடன் இணைந்து, திருச்சி கே.கே.நகர் மாநகர ஆயுதப்படை வளாகத்தில் உள்ள சமுதாயக்கூடத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இச்சிறப்பு மருத்துவமுகாமில் திருச்சி மாநகர காவல்துறையினர் சுமார் 200 காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டார்கள்.
இதில் காற்று மாசு தொடர்பான ஆராய்ச்சிக்காக காவல் ஆளிநர்களின் ரத்தம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. மேலும் முகாமில் பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் திரு.செல்வம், முகாம்களின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். மேலும் காவல்துறை சார்பில் திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் பேசுகையில், ‘முதலில் இந்த மருத்துவ முகாமை ஏற்பாடு செய்த எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி மருத்துமனை, ஐ.சி.எம்.ஆர்/டி.ஹெச்.ஆர் மற்றும் அப்பலோ ஆகிய நிர்வாகத்திற்கு வாழ்த்து தெரிவித்து கொண்டு, போக்குவரத்து காவலர்களுக்கு வானிலை மற்றும் புவியியல் மாற்றம் சுற்றுபுறசுழல் சுகாதார சீர்கேட்டினால், வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை மண்டலத்தினால் சுகாதாரம் பாதிக்கப்படகூடும்.
என்பதால் பரிசோதனை அவசியம் எனவும், முதன்முதலாக திருச்சி மாநகரத்தில் தான் இந்த உடல் பரிசோதனை முகாம் நடத்தப்படுகிறது, இதனை காவல் ஆளிநர்கள் பயன்படுத்தி கொள்ளவேண்டும் என பேசினார்கள்”.மேலும் பாரதிதாசன் பல்கலைக்கழக சின்டிகேட் உறுப்பினர் திரு.பாபுராஜேந்திரன், உயிரி தொழில்நுட்பதுறையின் முதன்மை ஆய்வாளர் மருத்துவர் திருமதி.தாமரைசெல்வி மருத்துவர் திரு.அச்சிராமன், மருத்துவர் திரு.கோவிந்தராஜன், பல்கலைக்கழகத்தின் பதிவாளர் திரு.கணேசன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்