சென்னை: சென்னையில் பல்வேறு கோயில்களில் நடந்த பங்குனி உத்திர திருவிழாவின் போது, காவல் துறையினர் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ததால், எந்தவித அசம்பாவித சம்பவங்கள் நிகழாமலும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏதும் நடைபெறாமல் திருவிழா சிறப்பாக நிறைவடைந்தது. During Panguni Uthiram festival across various temples in Chennai, Greater Chennai Police made elaborate security arrangements and ensured safety of the devotees. சென்னை பெருநகரில் பங்குனி உத்திர திருவிழா, மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோவில், கீழ்பாக்கம் கங்காதீஸ்வரர் கோயில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில், மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோயில், வடபழனி ஆண்டவர் திருக்கோயில் உட்பட பல்வேறு திருக்கோயில்களில் நடைபெற்றது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில் இத்திருவிழாவில் 3000 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இணை ஆணையாளர்கள், துணை ஆணையாளர்கள் மற்றும் 3000 க்கும் மேற்பட்ட காவல் ஆளிநர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இத்திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களும், பொதுமக்களும் வசதியாக சாமியை தரிசனம் செய்வதற்கு சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. மேலும் பல்வேறு இடங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு போக்குவரத்து சிரமம் ஏற்படாமல் இருக்க வாகனங்களை நிறுத்துவதற்கும், முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்தும் சிறப்பான ஏற்பாடுகளை போக்குவரத்து காவல்துறையினர் செய்தனர்.
கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
திருத்தேர் விழாவின்போது தேருடன் காவல் ஆளிநர்கள் பாதுகாப்பு பணியில் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டு கூட்ட நெரிசல் ஏற்படாமலும், பொதுமக்கள் சாமி தரிசனத்தை நல்ல முறையில் செய்திடவும் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அறுபத்து மூவர் திருவிழாவின் போது ஒவ்வொரு பல்லக்குடனும் காவல் ஆளிநர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு பொதுமக்கள் தரினத்திற்கு சிறப்பான பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
கோவிலுக்குள் சென்று சாமியை தரிசனம் செய்திட வரும் பக்தர்களுக்கு சிறப்பு வழிகள் ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், திருவிழாவில் குற்ற நிகழ்வுகளை தடுப்பதற்கு திருக்கோவில்களை சுற்றி ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க FRS (Face Recognition Software) எனும் புதிய செல்போன் செயலி மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.