திண்டுக்கல் : (25.05.2022), திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் மேம்பாலத்தில் சத்திரப்பட்டியைச் சேர்ந்த காளீஸ்வரி, என்பவர் தனது கைப்பையை தவறவிட்டார். உடனே ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில், புகார் கொடுத்தார். இதையடுத்து ஒட்டன்சத்திரம் குற்றத்தடுப்பு பிரிவு காவலர்கள், அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து 1 மணி நேரத்தில் கைப்பையை மீட்டனர். இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன், அவர்கள் பணம் ரூ.50,000/- மற்றும் 3 சவரன் தங்க நகைகள் அடங்கிய, கைப்பையை உரியவரிடம் ஒப்படைத்தார்கள். மேலும் சிறப்பாக பணி செய்த, ஒட்டன்சத்திரம் குற்றத்தடுப்பு பிரிவு காவலர்களுக்கு வெகுமதி வழங்கி பாராட்டினார்கள்.
