மதுரை : மதுரை மாவட்டத்தில் போதைப் பொருட்களை பதுக்குதல், கடத்தல் மற்றும் விற்பனை, போன்றவற்றை கட்டுப்படுத்த தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மதுரை காவல் கண்காணிப்பாளர், அவர்களின் தனிப்படை யினருக்கு புகையிலைப் பொருட்கள் பதுக்கல் சம்மந்தமாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மேலூரை சேர்ந்த வேலாயுதம் (22) ,முரளி (34), அருண்குமார் (24), ஆகியோர் கைது செய்யப்பட்டனர் . பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேற்படி எதிரிகள் புகையிலைப் பொருட்களை மதுரை மாவட்டத்தில் மேலூர் காவல் நிலைய பகுதிக்குட்பட்ட உள்ள திருவாரூர், பகுதியில் பதுக்கி வைத்திருந்தனர்.
இதை தனிப்படையினர் சோதனை செய்தனர். இதில் சட்டத்திற்குப் புறம்பாக புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. மேலும், இது சம்பந்தமாக மேலூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு எதிரிகள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து புகையிலைப் பொருட்கள் 780 கிலோ இதன் மதிப்பு ( ரூபாய் 10 லட்சம்), மற்றும் இரண்டு கார் மற்றும் ஒரு சரக்கு வாகனம் உட்பட 3 இரு சக்கர வாகனங்கள், பறிமுதல் செய்யப்பட்டது. சிறப்பாக பணியாற்றிய தனிப்படையினருக்கு காவல் கண்காணிப்பாளர் பாராட்டுக்களை தெரிவித்ததார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி