திருநெல்வேலி: 18.04.2022 திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே கடந்த 11.04.2022-ம் தேதி நகை கடை உரிமையாளரை மர்ம நபர்கள் அரிவாள் மற்றும் இரும்பு கம்பியால் தாக்கி இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற சுமார் 4½கிலோ தங்க நகை மற்றும் பணத்துடன் கூடிய பையை பறித்துச் சென்ற வழக்கில் மேற்படி எதிரிகளை விரைந்து கைது செய்து 3 கிலோ 100 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்த செய்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையிலான தனிப்படை போலீசார் 21 பேரையும் இதேபோல் 03.04.2022 அன்று
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், நேசமணிநகர்
காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நடுக்காட்டு இசக்கியம்மன் கோவில் பகுதியில் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 82 பவுன் தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடி சென்ற வழக்கில் எதிரியை கைது செய்த நகைகளை பறிமுதல் செய்த தனிப்படை காவல்துறையினர் 24 பேருக்கும் மேலும் 2012-ம் ஆண்டு தென்காசி மாவட்டம், செங்கோட்டை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கலங்காதகண்டி பகுதியை சேர்ந்த கனகராஜ் என்பவரை அதே பகுதியை சேர்ந்த துரை அவரது தந்தை ராஜ் இருவரும் கொலை செய்தனர். இவ்வழக்கில் சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இருவருக்கும் ஆயுள் தண்டனை கிடைக்கப் பெறச் செய்த செங்கோட்டை காவல் ஆய்வாளர் திரு.சாம்சுந்தர் அவர்கள் மற்றும் நீதிமன்ற காவலர் முருகன் ஆகியோரை திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.பிரஷேஷ்குமார்,இ.கா.ப அவர்கள் பாராட்டி நற்சான்றிதழ் வழங்கினார்.