சென்னை : கடந்த 2014 ம் ஆண்டு சைதாப்பேட்டை பகுதியில் 6 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக முருகன் (எ) முருகேசன் (எ) செல்வம், மேற்குமாம்பலம்,சென்னை என்பவர் மீதும், கடந்த 2016 ம் ஆண்டு குமரன் நகர் பகுதியில், 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக ரங்கநாதன் என்பவர் மீதும் சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், போக்சோ சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். மேற்படி இரண்டு வழக்குகளின் விசாரணை உயர் நீதிமன்ற வளாகத்தில், உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மேற்படி 2 வழக்குகளிலும் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்தும், நீதிமன்ற அலுவல் புரியும் தலைமைக்காவலர் திருமதி.R.கொங்கல்பிரட்டி, (த.கா.36490) முறையாக சாட்சிகளை ஆஜர்படுத்தி வந்த நிலையில், நீதிமன்ற நடவடிக்கைகளின் படி வழக்கு விசாரணை முடிவடைந்து குற்றவாளி முருகன் (எ) முருகேசன் (எ) செல்வம் என்பவருக்கு 5 வருடங்கள் சிறைதண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், மற்றொரு வழக்கில் குற்றவாளி ரங்கநாதன் என்பருக்கு 10 வருடங்கள் சிறை தண்டனையும், ரூ.5,000/- அபராதமும் விதித்து நீதிபதி அவர்கள் தீர்ப்பு வழங்கினார்.