தேனி : சின்னமனூர் காவல் சரகத்திற்குட்பட்ட, மார்க்கையன் கோட்டையில் பூட்டியிருந்த வீட்டில் நடந்த திருட்டு வழக்கில், துளியளவு வன்முறை இல்லாமல் சாணி உருண்டை டெக்னிக் மூலம் அண்டாவில் சாண உருண்டைகளை போடவைத்து சாதுர்யமாக 12 பவுன் நகையை மீட்டு புகழ்பெற்ற காவல் ஆய்வாளர் திரு. சேகர், என்பது குறிப்பிடத்தக்கது. சின்னமனூர், காவல் நிலையத்தை” எழில்மிகு இயற்கை பூங்காவாக” உருவாக்கி வைத்திருப்பதோடில்லாமல், காவல் நிலையத்திற்குள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கண்காணிப்பு கேமரா மற்றும் Exhaust fan (வெப்பம் வெளியேற்றும் விசிறி), உள்ளிட்ட வசதிகளுடன் ”அரசியல், அறிவியல், சட்டம்,வரலாறு, நாவல்கள், சிறுகதை” போன்ற, புத்தகங்களை உள்ளடக்கி 800-க்கும் மேற்பட்ட புத்தகங்களுடன் நூலகம் அமைத்துள்ளார்,
குறிப்பாக, பள்ளி மாணாக்கர்களுக்கும், போட்டித் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களுக்கும் பயன்படும் விதமாக நூலகம் அமைத்தது தேனி மாவட்ட, அனைத்து தரப்பு மக்களிடத்திலும் பெரும் பாராட்டுக்களோடு வரவேற்பை பெற்றதை தொடர்ந்து நடிகரும், மக்கள் நீதி மையக் கட்சியின் தலைவருமான உலக நாயகன் கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆய்வாளர் திரு.சேகர், அவர்களோடு, நிறைய சககாவலர்களையும், பாராட்டி கெளரவித்திருக்கிறார். சின்னமனூர் காவல் நிலையத்தில் நூலகம், அசத்தும் போலீசார் என முதன்முதலில் கடந்த மார்ச் மாத இறுதியில் இச்செய்தியை, ஊடக தளத்தில் என்னால் பதிவு செய்யப்பட்டது, என்பதில் பெருமை கொள்கிறேன்.