கரூர்:கீழ்பென்னாத்தூர்பெற்றமகளுக்குசூடுவைத்துசித்தரவதைசெய்ததாயைபோலீசார்கைதுசெய்தனர்.திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் பகுதியில் வசிப்பவர் பழனி (வயது 35), இவரது மனைவி மேரி (28). இவர்களுக்கு கார்த்தி (12), பிரவீன்(11) என்ற 2 மகன்களும், துளசி (9), ஜூலி (4) என்ற 2 மகள்களும் உள்ளனர். பழனி சென்னையில் தங்கி சோபா தைக்கும் தொழிலுக்காக தங்கியிருந்து வேலை செய்து வருகிறார்.தம்பதியினருக்கு இடையே இடையே அடிக்கடி சண்டை போட்டு வந்ததாகவும், பின்னர் சென்னைக்கு சென்று விடுவது பழனி வழக்கமாக இருந்து வருவதாக கூறப்படுகிறது.
குடும்ப பிரச்சனையை மனதில் வைத்துக்கொண்டு தனது மகள் என்றும் பாராமல் 4 வயது சிறுமி ஜூலியை வீட்டில் உள்ள கத்தியை எடுத்து நெருப்பில் சூடேற்றி உடல் முழுவதும் சூடு வைத்துள்ளார்.
இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட குழந்தைகள் நல உதவி அலுவலத்திற்கு போன் மூலம் தகவல் கிடைத்தது.அதன் பேரில்,குழந்தைகள் நல உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் அசோக், அணி உறுப்பினர் பாலையா ஆகியோர் கீழ்பென்னாத்தூர் போலீசார் உதவியுடன் சிறுமி ஜூலி வீட்டிற்கு சென்று ஜூலியை மீட்டு திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்து குழந்தைகள் நல உதவி அளித்த புகாரின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் மணிவண்ணன் வழக்குப் பதிவு செய்து சிறுமி ஜூலியின் தாய் மேரியை கைது செய்து திருவண்ணாமலை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.