ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் ஊராட்சி நாலுபனை கிராமத்தில் மீனவர்கள் ஏராளமானோர் உள்ளனர். இக்கிராமத்தில் 1964 புயலுக்கு பின், இப் பகுதியில் 600க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்நிலையில் இப் பகுதிக்கு 1979ல் சாலை வசதி ஏற்படுத்தப்பட்டது. சேதமடைந்த இச்சாலையை செப்பனிட தங்கச்சிமடம் ஊராட்சி சார்பில் நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து பழைய சாலையை பெயர்த்தெடுத்து புதிய சாலை பணிகள் செய்ய தயாரானது.இந்நிலையில், இப்பகுதி, வனத் துறைக்கு சொந்தமானது என்பதால் அனுமதியின்றி சாலை பணியை துவங்கக்கூடாது எனவனத்துறை அதிகாரிகள் தடுத்தனர்.
இதனால், கடந்த 2 ஆண்டுகளாக அப்பகுதி போக்குவரத்திற்கு பயனற்றிருந்தது. இதனால், அவசர தேவை, பள்ளி, கல்லூரிகள் செல்ல வாகனங்கள் உள்ளே வரமுடியாத நிலையால் பெரிதும் சிரமம் அடைந்தனர். இந்நிலையில் நாலுபனை கிராமத்தில் நிறுத்திய சாலை பணியை உடனடியாக துவங்க கோரி லுபனைனவபெண்கள் உள்ளிட்டோர் தங்கச்சிமடம்ஊராட்சிஅலுவலகத்தைமுற்றுகையிட்டதால்சிறிதுநேரம்பரபரப்புநிலவியது.இதையடுத்து தங்கள் கோரிக்கை மனுவை தங்கச்சிமடம் ஊராட்சி தலைவரிடம் அளித்தனர்.உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை யடுத்து முற்றுகையை விலக்கிக்கொண்டு கலைந்து சென்றனர்.