சென்னை: சார்பு ஆய்வாளர் தேர்வுக்கான முடிவுகளை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் கடந்த 11.07.2018 ம் தேதி சார்பு ஆய்வாளர் (தொழில்நுட்பம்) தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியிட்டது.
இதனைத் தொடர்ந்து எழுத்துத் தேர்வு மற்றும் உடல் தகுதி தேர்விற்கு பிறகு 899 விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். நேர்காணல் முடிவில் 309 பேர் மருத்துவ சோதனை மற்றும் காவல் விசாரணைக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மதிப்ெபண் அடிப்படையில் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் சேர்க்கை எண்கள் www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.