சென்னை: கீழ்பாக்கம் துணை ஆணையாளர் திரு.K.கார்த்திக்கேயன், இ.கா.ப., அவர்கள் ஐபிஎஸ் அதிகாரிகள் துப்பாக்கி சுடும் போட்டியின் இறுதி போட்டியில் 4 தங்கம், 1 வெண்கல பதக்கத்துடன், ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தில் முதல் பரிசு பெற்றார்.r. Karthikeyan IPS, Deputy Commissioner of Police, Kilpauk won the first prize in the overall championship, with 4 Gold and 1 Bronze medal in the finals of the IPS Officers shooting Competition. இன்று (11.03.2022) , மருதம் வளாகத்தில் உள்ள துப்பாக்கி சுடும் தளத்தில் நடைபெற்ற தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் துப்பாக்கி சுடும் போட்டியின் இறுதி போட்டியில், ஏற்கனவே நடத்தப்பட்ட சுற்று போட்டிகளில் வெற்றி பெற்ற 36 ஐபிஎஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் திரு.K.கார்த்திக்கேயன், இ.கா.ப., துணை ஆணையாளர், கீழ்பாக்கம் காவல் மாவட்டம் அவர்கள் இன்று நடந்த இறுதிபோட்டியில் 4 தங்கப்பதக்கம் மற்றும் 1 வெண்கல பதக்கம் பெற்றதுடன், சாம்பியன் ஆப் சாம்பியன் பட்டத்தில் முதலாவது இடத்தை பிடித்து பெருமை சேர்த்துள்ளார். இப்பிரிவில், திரு.பிரவேஷ்குமார், இ.கா.ப., துணை தலைவர், திருநெல்வேலி 2வது இடமும், திரு.ஶ்ரீஅபினவ், இ.கா.ப., சேலம் மாவட்டம் 3வது இடமும் பிடித்தனர்.
இப்போட்டியில், காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் சி.சைலேந்திர பாபு, இ.கா.ப., அவர்கள் வெற்றி பெற்ற காவல் அதிகாரிகளுக்கு பதக்கங்கள் மற்றும் கேடயங்கள் வழங்கினார். இப்போட்டியில், கூடுதல் காவல் இயக்குநர்கள் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப, (சிபிசிஐடி), திரு.பி.அமல்ராஜ், இ.கா.ப., (செயலாக்கம்), திரு.ஆர்.சுதாகர், இ.கா.ப,. காவல் துறை தலைவர், மேற்கு மண்டலம் மற்றும் காவல் அதிகாரிகள் பதக்கங்கள் பெற்றனர்.