காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம், திருபெரும்புதூர் உட்கோட்டம், சுங்குவார்சத்திரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட துலசாபுரம் கிராமத்தில், உள்ள கற்பக விநாயகர் கோயில், வெளியில் உள்ள நவகிரக பீடத்தில் உள்ள சிலையை சேதப்படுத்தியும் மற்றும் சுற்றுப்புறத்தில், உள்ள கற்சிலைகளை அந்த இடத்தில் இருந்து பெயர்த்து எடுத்து தரையில் வைத்தும் மற்றும் அருகில் உள்ள லஷ்மி அம்மன் கோயிலில் வெளியில் உள்ள சிமெண்டால் ஆன காவல் தெய்வ சிலையும், சிங்கவாகன சிலை ஆகியவற்றை (20.06.2022), அன்று இரவு சேதப்படுத்தப்பட்டுள்ளது. சம்மந்தமாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளை, பிடிக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆ.சுதாகர், அவர்கள் உத்தரவின்பேரில் திருப்பெரும்புதூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.சுனில் அவர்களின் மேற்பார்வையில்.
திரு.பரந்தாமன், ஆய்வாளர், சுங்குவார்சத்திரம் அவர்களின் தலைமையில், ஒரு தனிப்படை அமைத்து விசாரணை செய்ததில், திருப்பெரும்புதூர் தாலுக்கா, இடையார்பாக்கம் கிராமம், மேட்டு காலனி, பொருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த துளசி (எ) சதீஷ் பிரேம்குமார்(40), தஃபெ.வேதகிரி என்பவர் தீவிர சிவன் பக்தர் மற்றும் ஆன்மீகவாதி என்றும், கோயில்களில் நவக்கிரக சிலைகள் அமைத்த முறை சரியில்லை, என்றும் காவல் தெய்வங்கள் சிலைகள் உள்ள இடம் சரியில்லை, என்றும் குடிபோதையில் சிவன் சிலையை மட்டும் விட்டுவிட்டு மற்ற சாமி சிலைகளை சேதப்படுத்தியுள்ளார். என்று விசாரணையில் தெரியவந்ததையடுத்து மேற்படி நபரை சுங்குவார்சத்திரம் காவல் நிலைய தனிப்படை காவல் துறையினர், குற்றம் நடந்த 24 மணி நேரத்திற்குள் கைது செய்து திருப்பெரும்புதூர் நீதிமன்றத்தில், ஆஜர்படுத்தி காஞ்சிபுரம் சிறையில், அடைக்கப்பட்டார்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்