விழுப்புரம்: காவல்துறை தலைமை இயக்குநர் படைத்தலைவர் முனைவர் செ.சைலேந்திரபாபு, இ.கா.ப., அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் விழுப்புரம் சரக கலந்தாய்வு கூட்டத்தில் வடக்கு மண்டல காவல் துறைத்தலைவர் திரு. பிரேம்ஆனந்த்சின்ஹா IPS., விழுப்புரம் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு பாண்டியன் IPS., மற்றும் விழுப்புரம் SP. திரு. ஶ்ரீ நாதா IPS., கடலூர் SP. திரு. சக்தி கணேசன் IPS., மற்றும் கள்ளக்குறிச்சி SP. திரு.செல்வகுமார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக மாவட்ட ஆட்சியர் திரு.த.மோகன் IAS., டிஜிபி அவர்களை வரவேற்றார். இக்கூட்டத்தில் சட்டம் ஒழுங்கினை பேணிக்காத்தல், கஞ்சா, ஹான்ஸ் போன்ற வழக்கில் விரைந்து செயல்படுவது போக்குவரத்து, ரௌடிகளை தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டுவருதல் பற்றி கலந்துரையாடப்பட்டது. மேலும் டிஜிபி அவர்கள் மூன்று மாவட்டத்தில் சிறந்து விளங்கிய அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை சிறந்த பணியினை பாராட்டி நற்சான்றிதழ்கள்
வழங்கியும்.