திருவள்ளூர்: அனைத்தையும் படைத்தவருக்கு நன்றி மதசார்பற்ற சமூக அறக்கட்டளை சார்பில் 40 வது ஆண்டு விழா சென்னை அடுத்த பெரம்பூர் தனியார் திருமண மண்டபத்தில் ஏழைகளுக்கு உதவிகள் வழங்கும் விழா டி. ஏ. ஜே தர்மராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் பார்வையற்றோருக்கு ஊன்றுகோல், மூளை வளர்ச்சி இல்லாதவர்களுக்கு உதவி தொகை, ஊனமுற்றோருக்கு தள்ளுவண்டி, கிராமத்தில் இரவு பாடசாலையில் பயிலும் மாணவர்களுக்கு பரிசு, ஏழைப் பெண்களுக்குத் தாலி, பார்வையற்றவர்களுக்கு கல்யாண சீர்வரிசை, அன்னதானம், உள்ளிட்டவை இரண்டு லட்ச ரூபாய் மதிப்பில் இலவசமாக வழங்கப்பட்டன.
இதில் சிறப்பு அழைப்பாளராக செம்பியம் காவல் ஆய்வாளர் ஐயப்பன் கலந்துகொண்டு பார்வையற்றோர் மற்றும் ஏழைகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது பேசிய அவர் பெரிய கூட்டங்களில் கலந்து கொள்வதை விட ஏழைகளுக்கு உதவி செய்கிற கூட்டத்தில் கலந்து கொள்வது ஆன்மாவிற்கு திருப்தி எனவும் ஏழைகளுக்கு உதவி செய்வதில் அனைத்தையும் படைத்த அவருக்கு நன்றியில் தன்னையும் இணைத்துக் கொள்வதாகவும் வரும் காலங்களில் என்னுடைய பங்கு உண்டு எனவும் இதில் கலந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்தார் இதில் சமூக சேவகர்கள் லட்சுமிபதி, கோதண்டவேலு சஞ்ஜீதா, ராஜேஷ் சரவணன் கற்பகம்,உட்ப்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்